Friday, June 14, 2013
சோழர் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த ஒட்டக்கூத்தரும் தாம் பாடிய மூவர் உலாவிலும், சோழ மரபு கூறுமிடத்தும் இங்ஙனமே சோழரின் முன்னோராக வடநாட்டுச்சத்திரியர் பலரைக் கூறுவதும் கருததக்கது. '... ----------------------- கலிங்கத்துப்பரணி
சோழ மன்னர்கள் யார்? அண்ணாமலை நகரிலேயே அரங்கேறிய ஓர் ஆதாரம்!
ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டொன்றில் சோழர் படைத்தளபதியாக இருந்த ஒரு பள்ளி (வன்னியர் ) இனத்தவர்
ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டொன்றில் சோழர் படைத்தளபதியாக இருந்த ஒரு பள்ளி (வன்னியர் ) இனத்தவர் குறிப்பிடப்படுகிறார்.
"வேசாலி பிரமதேயத்திலிருக்கும் குடிப்பள்ளி பெருமான் இரண்டாயிரவனான ஸேநாபதி ராஜேந்திர சோழ வேசாலிப் பேரரையன்" (ARE 124 of 1902)
இரண்டாயிரவன் என்பதால் இந்த பள்ளி இனத்தவர் இரண்டாயிரம் வீரர்கள் கொண்ட படைப்பிரிவிற்கு தளபதியாக இருந்தார் என்பது தெரிய வருகிறது.
###
நன்றி : தகவலை அளித்த திரு சுவாமி அவர்களுக்கு நன்றி :
Friday, October 26, 2012
சோழ மன்னர்கள் யார்? அண்ணாமலை நகரிலேயே அரங்கேறிய ஓர் ஆதாரம்!
தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் இரண்டாவது கருத்தரங்கு 1995 ஆகஸ்ட் 26, 27இல் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், ஆம் சிதம்பரத்தில் தில்லை நடராசர் திருக்கோவில் இருக்கும் ஊரில் நடைபெற்றது.
அப்போது அதாவது 1995லேயே தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய புலவர் செ.இராசு சோழமன்னர்கள் யார்? என்றும் தலைப்பில் கட்டுரை ஒன்று வாசித்தார்.
அந்தக் கட்டுரையில் சோழ மன்னர்களின் வாரிசுகள் சோழமன்னர் மரபில் தோன்றிய சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவாரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறுகிறார்.
அதற்கு முதலில் அவர் காட்டிய ஆதாரம்: 2.7.1939 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், தேப்பெருமாள் நல்லூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் வரவேற்புரையாற்றிய வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள், சோழ மன்னர் மரபினர் சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறினார்.
சோழப் பெருமன்னர்களுக்குக் குலதெய்வம் தில்லை நடராசரே என்று முன்னர் குறிப்பிட்டோம். விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தியில் தன்குல நாயகன் தாண்டவம்பயிலும் தில்லையம்பலம் என்று கூறப்படுகிறது.
இன்று உள்ள பிச்சாவரம் ஜமீன் தார்களுடைய குலதெய்வம் நடராசப் பெருமாளே ஆவார். இவ்வாறு சோழ மன்னர்களின் மரபினர் பிச்சாவரம் ஜமீன்தார்களே என்று கூறி புலவர் செ.இராசு காட்டும் ஆதாரம் தஞ்சைச் சோழமன்னர்களின் வாரிசு என்று கூறுவதற்குக் காட்டும் ஆதாரம், தில்லைக் கோயில் உரிமையாளர்கள் யார் என்பதைக் கூறுகிறது.
அண்மைக்காலம்வரை தில்லை நடராசர் கோயில் உரிமை பிச்சாவரம் ஜமீன்தாருக்கே இருந்தது. ஆதலால் தில்லைக் கோயிலின் சாவி நாள் தோறும் ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. அர்த்த சாமப் பூசையின் பின் கோயில் சாவி பல்லக்கில் வைக்கப் பட்டுப் பிச்சாவரம் கொண்டு சென்று அளிக்கப்படும். அதிகாலை மீண்டும் அவ்வாறே வாங்கி வரப்படும்.
நடுநிலையாளர்களே நாட்டோர்களே! பாருங்கள் இந்த உண்மை வெளிச்சத்தை எங்களுக்குத்தான் உரிமை என்று நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிச் சத்தியவாக்கு என்ற பெயரில் பொய்சத்தியம் செய்து கொடுக்கும் இவர்களின் யோக்கியதையை. தங்களுக்குச் சொந்தக் கோவிலாளால் தினமும் சாவியைக் கொண்டு போய் ஒப்படைத்தது ஏன்? திரும்பவும் போய்த் தினமும் வாங்கி வந்தது ஏன்?
சாவியை எங்கே கொண்டு போய், எவரிடம் கொண்டு போய் ஒப்படைத்திருக்கிறார்கள்? அக்கம்பக்கத்திலே உள்ள அரசு அலுவலகத்தில் எதுவும் ஒப்படைக்க வில்லை. அவர்களில் மூத்த தீட்சிதரிடம் ஒப்படைக்கவில்லை. சிதம்பரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரத்தில் கொண்டு போய்ச் சேர்த்து அங்கிருந்து தினமும் காலை கொணர்ந்திருக்கிறார்கள். இச்செய்தி மறுக்கப்படாமல் நடைபெற்ற செய்தி.
ஆகத் தீட்சிதர்கள் கோயிலைக் காவல் காக்க இரவில் தங்குவது, காவல் காப்பது ஆகியனஎல்லாம் கடந்த நூற்றாண்டின் இடையில் ஏற்பட்ட பழக்கம் என்பது தெரிகிறது.
சிதம்பரம் கோயில் ஆட்சி உரிமையைப் பிச்சாவரம் ஜமீன்தார்கள் பெற்றிருந்ததில்லை மூவாயிரவர்க்குள் ஏற்படும் சிக்கல்களையும், வழக்குகளையும் பிச்சாவரம் ஜமீன்தாரே தீர்த்துவைத்தனர்.
நன்கு கவனிக்கவேண்டும். தீட்சதர்கள் தங்கள் வழக்குகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளாது பிச்சாவரம் ஜமீன்தாரின் தீர்ப்புக்கு விட்டனர் அதாவது பொது தீட்சிதர்கள் என்றும் தீட்சிதர்கள் சபை என்றும் அவர்கள் கொண்டிருக்கிற அமைப்பு சமீப காலங்களில் உருவாகி இருக்கிறது. இந்தப் பொது சபை கூடுவது. பொது சபை வழங்கும் தீர்ப்பு நடாராசர் வழங்கும் தீர்ப்பு என்பதெல்லாம் சமீபகாலங்களில் ஏற்பட்டுள்ளது.
பிச்சாவரம் ஜமீன்தார்கள் சோழர் வாரிசு என்பதால், கோவிலைக் கட்டியவர்கள் சோழ மன்னர்கள் என்பதால், அவர்களுக்கு அடங்கிக் கோயிலில் பூஜை செய்து வந்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் 5.11.1911இல் 12 தீட்சிதர்கள், தீட்சிதர்களின் சார்பில் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிச்சாவரம் ஜமீன்தாரை 1 மகாளளஸ்ரீ சக்கரவர்த்தியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளன.
முடிசூட்டு விழா என்பது ஆரிய முறைப்படி நடக்கத் தலைப்பட்ட பின்னர், முடிசூட்டுதலை தீட்சதர்கள் செய்து வந்துள்ளனர்.
வலம்புரிச் சங்கால் பஞ்சாக்கரப் படியில் அமரச் செய்து முடி சூட்டினர் என்பதைப்பின் வரும் பாட்டு உறுதிப்படுத்துகிறது.
அலகில் மற்றெவரும் அணுகுவதற்கு அரிய பற்சக்கரத்திருப்படி மிசை அமர்த்தி
அஞ்சேல் என நடம் ஆடும் இறைவன்முன் வலம்புரிச்சங்கால் கங்கை நீர் பெய்து நலம் பெறத் திருஅபிடேகம் செய்தபின் தேவரும் முனிவரும் திருவுளங்களிய
பூமகள் இங்கு பொன் மணி மண்டபத்து அரியாசனத்தில் அரசனை அமர்த்தி
பரிவுடன் துதித்துப் பரமனை வணங்கி முடிதலை முனிவர் திருக்கரத்து ஏந்திச் சூடினர் வாழ்த்திச் சோழனார் தமக்கே
கோயில் தீட்சிதர்களுக்கு உரிமை யுடையது என்றால் அவர்களுடைய கோயிலில் போய் சோழ மரபினர் என்று கூறப்படுவோர் முடி சூட்டிக் கொள் வார்களா?
பிச்சாவரம் ஜமீன்தார்கள் பட்டா பிஷேகத்தை ஒட்டிப் பட்டாபிஷேகப் பிரகடனம் என்ற பெயரில் வெளியிடும் அறிவிப்பிலே,
ஆதியிலே கௌட தேசாதி பனுடைய மூத்த குமாரனாகிய இரணிய வர்வச் சக்கரவர்த்தி என்னும் காரணப் பெயர் பூண்ட சிம்மவர்மச் சோழனால் பதஞ்சலி, வியாக்கிரபாதர்கள் ஆக்ஞைப் படி தில்லைக் காட்டைத் திருத்தி தேவாலயமாகப் பிரதிஷ்டை செய்யப் பெற்று ஸ்ரீ சிதம்பரம் நடராசப் பெரு மாள் சந்நிதியிலே தில்லை மூவாயிர முனிவர்கள் திருமுன்னே ஸ்ரீபஞ்சாக்கரப் படியின் மீதே மேற்படி சோழ வம்சத்தினருக்குத் தொன்று தொட்டு பட்டாபிஷேகம் நடந்து வந்த சம்பிராதாயப்படி அச்சோழ வம்சவழி வந்த பிச்சாவரம் ஜமீன்தார்.
எனும் அந்தப் பா தொடங்குகிறது முடிவுரையாகப் புலவர் இராசு இவ்வாறு முடிக்கையிலும் சோழருக்கு அன்றி முடி சூடாத்தில்லை மூவாயி ரவர் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு முடிசூட்டுவதாலும், அப்போது புலிக் கொடி அளித்தலினாலும், வளவன் என்ற பெயர் உள்ளமையாலும், தில்லை நிருவாகம் பெற்றிருந்த காரணத் தாலும் தில்லை நடராசரைக் குல தெய்வமாகக் கொண்ட காரணத் தாலும், தில்லைக் கோயில் சாவியை வைத்திருந்த உரிமையாலும், தில்லை தீட்சிதர்கள் கட்டுப்பட்டிருந்தமை யாலும், சோழனார் என்ற பெயர் பெற்றிருப்பதாலும் பிச்சாவரம் ஜமீன்தார் மரபினரே சோழர் மரபினர் என்பது பெறப் படுகிறது.
விடுதலைக்குப்பின் காங்கிரசு அரசு மய்யத்திலே பதவி ஏற்றபின் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இவ்வாறு ஜமீன் ஒழிப்புச் சட்டமாக நிறை வேறியதும் ஜமீன்தார்கள் தாங்கள் கொண்டிருந்த அரண்மனை, கோயில், நிலம் ஆகியவற்றில் உரிமைகளை இழந்தனர்.
எனவே ஜமீன் ஒழிப்பிற்குப்பின் அதுவரை பிச்சாவரம் ஜமீன்தாரிடத்தில் இருந்த கோயில் உரிமையைப் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்கள் உரிமை கொண்டாடுபவர்கள் உரிமை யாளர்களாக மாறியதுபோல் தீட்சிதர்கள் உரிமை கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.
அதுவரையில் ஜமீன்தாரிடம் சென்று கோயில் சாவியை ஒப்படைத்து பின் பெற்று வந்தவர்கள் சாவியைக் கொண்டு சென்று கொடுக்காமல் தாங்களே வைத்துக்கொண்டு நிருவாகம் செய்யத் தலைப்பட்டு விட்டனர். இதுதான் உரிமை. எனவே, உரிமை இல்லாததை உரிமை கொண்டாடி வருவது எப்படி சொந்தமாகும்?
நாட்டுடைமை என்பது பல துறைகளிலும் நிறைவேறியதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்ததன் விளைவாகக் கலைஞர் அந்த பேருந்துகளைத் தேசியமயம் எனப்படும் நாட்டுடைமையாக்கியது அதற்கு என்ன அரசியல் நோக்கமா இருந்தது? மக்கள் நலன்தான் முன்னின்றது. அது போலத்தான் நிருவாக அலுவலரை நியமித்துக் கோயில் நிருவாகம் நேர்மையாக வெளிப்படையாக நடைபெறச் செய்வதில் என்ன அரசியல் நோக்கமிருக்கமுடியும்?
தமிழகத்திலுள்ள மற்றைய கோவில் நிருவாகம் அப்படித்தானே நடை பெறுகிறது? இத்தகு நடவடிக்கைக்கு அர்த்தம் பொருள், உள்நோக்கம் கற்பிக்கலாமா? அர்ச்சகர்களான தில்லைத் தீட்சிதர்களுக்கும் தமிழக அரசுக்கும் இதுவரை பகையோ, மோதலோ ஏற்பட்டதும் கிடையாது. இதுபோல் மய்யஅரசு வங்கிகளை நாட்டுடமையாக்கியது, ஜமீன்தாரி முறையை ஒழித்தது. மன்னர் மானியம் ஒழிப்பைச் செய்தது இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஒரு பொது நோக்கத்தின்பால் ஏற்பட்டவை. இதனால் சமூகம் பயன்பெற்றிருக்கிறது. ஜமீன் ஒழிப்பினால் ஏழை எளிய மக்கள் வயலில் உழுது உழைத்தவர்கள் நில உடைமையாளர் ஆயினர்.
எனவே மக்கள் நலனுக்குச் சட்டங்கள், விதிமுறைகள் உருவாகின்ற போது அதற்குக் குறுக்கே நிற்காது துணை நிற்பது, காலமாறுதலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் நல்ல புத்திசாலித்தனமான அணுகுமுறை. அதனால் ஏற்படும் இழப்புகள் இருந்தால் இழப்பீடுகள் கேட்கலாம். வருமானக் குறைவு ஏற்படுமானால் ஈடுசெய்ய நிதி உதவி வேண்டலாம். தவறில்லை.
பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்
Saturday, October 20, 2012
ராஜ ராஜ சோழன் அவர்களின் 1027 வது சதய விழாவிற்கு அழைப்பு விடுக்கிறோம்
வணக்கம் தோழர்களே ,
அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயர் கொண்டு , வன்னியர்களின் உடையார் மற்றும் கண்டிய தேவர் பட்டம் கொண்ட ஸ்ரீ பெரும்பள்ளி க்ஷத்ரிய சிகாமணி ராஜ ராஜ சோழன் அவர்களின் 1027 வது சதய விழாவிற்கு சோழர் படை வீரர் கூட்டம் படையாட்சிகளின் சார்பாக இந்த வன்னிய குல சத்ரிய இனம் அழைப்பு விடுக்கிறோம் .
......தில்லையில் " சோழர்க்கன்றி சூட்டோம் முடி" என்றுரைத்து இந்நாள் வரை அந்த பெருமையை வன்னியர்களுக்கே அளித்து , சோழர் பரம்பரை என்று உலகுக்கு பறைசாற்றிய அந்த தில்லை நடராஜன் ஆசீர்வாதத்தோடு சதய விழாவிற்கு அழைப்பு விடுக்கிறோம்.
மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012)
கம்பனுக்கு கைகொடுத்து காவிரிக்கு அணை எடுத்து ! செம்பொன்னால் சிதம்பரத்து சாமிக்கொரு கூரை காத்து ! புஞ்சையில நஞ்சையில புகழ் விளையும் தஞ்சையில புலி கொடிய ஏத்தி வச்சி புகழ் கொடிய பறக்க விட்டு ! ஈழநாட்டு எல்லை வர எசையோடு ஆண்டு வந்த சோழநாட்டு மன்னருங்க சந்ததியில் வந்தவரே !
Monday, November 5, 2012
Sunday, November 4, 2012
களப ராஜராஜன் என்றுள்ள கல்வெட்டு சாளுக்கிய சோழனது . நேரடி சோழனது அல்ல
“ களப ராஜராஜன்”
“ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு "இராண்டாம் இராசராச சோழனை" களபர்-கள்வன் எனவும் குறிப்பிடுவதால் , "முதலாம் ராஜ ராஜனும் " கள்ளர் சமூகமாக இருக்கலாம் என்று கள்ளர் சமூக நண்பர்கள் கூறுவதால் , அது மிகப்பெரும் பிழை என்று சொல்கிறேன் .
இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை “களப ராஜராஜன்” என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை”கள்வன் ராஜ ராஜன்” என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள “களப” என்ற வார்த்தை “களவ” என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல். ) என்பது கள்ளர் சமூகத்தார் வாதம் .
இது மட்டமான ஆதாரம் .
காரணம் , இந்த வார்த்தை உள்ள மெய்க்கீர்த்தி "இராண்டாம் இராசராச சோழனை" சொல்வது . அவன் முதலாம் ராஜ ராஜன் அல்ல .
அதோடு இந்த மெய்க்கீர்த்தி இரண்டாம் இராசராச சோழனால் வெளி இடப்பட்டது , இந்த இரண்டாம் ராஜா ராஜன் யார் தெரியுமா ?
இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவான்.இங்கு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்தே சாளுக்கிய மரபு கொண்டவர்கள் சோழர்கள் ... ஆகையினால் இவன் சாளுக்கிய சோழன் ...
ஆகவே இது மட்டமான ஆதாரம் .
அதுமட்டுமில்லை களப என்பதற்கு பல பொருள் உண்டு . களப என்றால் கலவை , யானை போன்ற பல பொருள் உண்டு .
எடுத்துக்காட்டு :
1. களப மாட வீதி - யானை செல்லும் வீதி என்றும் கூறலாம்.
2. களப மாட வீதியும் - சுண்ணம் பூசப்பெற்ற, மாளிகைகளை உடைய வீதியையும்
காரணம் , இந்த வார்த்தை உள்ள மெய்க்கீர்த்தி "இராண்டாம் இராசராச சோழனை" சொல்வது . அவன் முதலாம் ராஜ ராஜன் அல்ல .
அதோடு இந்த மெய்க்கீர்த்தி இரண்டாம் இராசராச சோழனால் வெளி இடப்பட்டது , இந்த இரண்டாம் ராஜா ராஜன் யார் தெரியுமா ?
இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவான்.இங்கு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்தே சாளுக்கிய மரபு கொண்டவர்கள் சோழர்கள் ... ஆகையினால் இவன் சாளுக்கிய சோழன் ...
ஆகவே இது மட்டமான ஆதாரம் .
அதுமட்டுமில்லை களப என்பதற்கு பல பொருள் உண்டு . களப என்றால் கலவை , யானை போன்ற பல பொருள் உண்டு .
எடுத்துக்காட்டு :
1. களப மாட வீதி - யானை செல்லும் வீதி என்றும் கூறலாம்.
2. களப மாட வீதியும் - சுண்ணம் பூசப்பெற்ற, மாளிகைகளை உடைய வீதியையும்
Refer: http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=73&pno=7
3. களப வன முலைப் பொறை சுமந்து உருகி இறந்ததோ -சந்தனக்குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச்
சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ
Refer : http://www.tamilvu.org/slet/l3100/l3100pd2.jsp?bookid=63&pno=64
4. பரிமள களப சுகந்த -- நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும்
Refer : http://www.kaumaram.com/thiru_uni/tpun0078.html
இதுபோன்ற பல பொருள் உண்டு .
ஆகவே இம்மன்னன் யானையை போன்ற பலம் பொருந்திய மன்னன் என்று புகழ “ களப ராஜராஜன்” என்று பாராட்ட பெற்றிருக்கலாம் .
சாளுக்கிய மரபுடைய இந்த சோழனை "களப " என்பது என்று கூறுவது அவன் களம் கண்டவன் என்பதனாலோ, அல்லது யானையை போன்ற பலம் பொருந்திய மன்னன் என்பதாலோ ,அல்லது சோழ மற்றும் சாளுக்கிய குலத்து கலப்பில் வந்த மன்னன் என்பதாலோ என்று பல பொருள்கள் இதில் அடங்கும் .அந்த கல்வெட்டின் முழு வாக்கியம் படித்தால்தான் அதன் முழு செய்தி நமக்கு கிடைக்கும் .
“ கள்வன் ராஜராஜன்” என்றாலும் இங்கே ஒரு குறிப்பிட்ட சாதியை சொல்ல இயலாது . கள்வன் என்பது திருடனை குறிப்பது . ஒருதன் நாட்டு மக்களை காக்கும் ஒரு மன்னனை அப்படி கூற காரணம் , அவன் மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன் என்பதனால் கூட இருக்கலாம் .
அடுத்து முத்தரையர்களில் குறிப்பிடத்தக்கவன் பெரும்பிடுகு முத்தரையன்(கி.பி. 655 – 680) என்பவன் ஆவான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ கள்வர கள்வன் என்பதாகும். இதனைச் செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே கள்வர கள்வர் எனப்படும் முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே எனலாம்
Refer: http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312112.htm
ஆக முத்தரையர் மன்னருக்கும் இந்த கள்வர் பட்டம் உண்டு . அதோடு முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று சொல்வதாலும், இவர்கள் கன்னட நாட்டவர் என்பதாலும் , இதே போல இரண்டாம் ராஜ ராஜனும் சாளுக்கிய (கன்னடர் ) பகுதியில் இருந்து வந்தமையால் அதே கள்வர் என்னும் வார்த்தையை உபயோகித்திருக்கலாம் அல்லவா .........
அதோடு சாளுக்கிய மரபுக்கும் கள்ளர் சாதிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
சாளுக்கிய மரபு கொண்ட முதலாம் குலோத்துங்க சோழனே பூணூல் அணிந்தவன் . இதை அப்போது எழுதிய களிங்கத்துபரணியும் உறுதிபடுத்துகிறது .
பேரனாகிய குலோத்துங்கனைக் கங்கைகொண்ட சோழன் தேவி, தன்
மலர்க்கையால் எடுத்து,
'அவனிபர்க்குப் புரந்தரனாம் அடையாளம்
அவயவத்தின் அடைவே நோக்கி
இவன் எமக்கு மகனாகி இரவிகுலம்
பாரிக்கத் தகுவன் என்றே'
கூறினாளாக ஆசி்ரியர் கூறுகின்றார்.
இவன் பூணூல் அணிந்தானாகவும், வடமொழி மறை பயின்றானாகவும்,
ஆசிரியர் கூறுகின்றார். இதனால் அக்காலத்திய தஞ்சைச்சோழர் தம்மை
வடநாட்டுச் சத்தி்யரின் கால்வழியில் வந்தாராகவே கொண்டு, வடநாட்டுச்
சத்திரியருக்குரிய ஒழுக்கத்தைக் கைக்கொண்டும் வந்தாராதல் தெரிகின்றது.
வடநாட்டுச் சத்தி்யரின் கால்வழியில் வந்தாராகவே கொண்டு, வடநாட்டுச்
சத்திரியருக்குரிய ஒழுக்கத்தைக் கைக்கொண்டும் வந்தாராதல் தெரிகின்றது.
ஆசிரியர் சயங்கொண்டாரும் சோழர் மரபு வரலாறு கூறுமிடத்துச்
சோழர்களின் முன்னோராக வடநாட்டுச் சத்திரியர் பலரைக் கூறுவதும்
சோழர்களின் முன்னோராக வடநாட்டுச் சத்திரியர் பலரைக் கூறுவதும்
ஈண்டு நோக்கத்தக்கது.
இவரை அடுத்துச் சோழர் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த ஒட்டக்கூத்தரும் தாம் பாடிய மூவர் உலாவிலும், சோழ மரபு கூறுமிடத்தும் இங்ஙனமே சோழரின் முன்னோராக வடநாட்டுச்சத்திரியர் பலரைக் கூறுவதும் கருததக்கது. '...
----------------------- கலிங்கத்துப்பரணி
Reference: http://www.tamilvu.org/library/l5920/html/l5920p12.htm
கள்ளர்கள் பூணூலும் அணிவதில்லை .. ஆனால் இந்த வழக்கம் வன்னியரில் உண்டு .'
இந்த கீழை சாளுக்கிய மரபு கூட வன்னியருக்கும் உறவாக உள்ளது .. அதாவது வன்னியர் பிறப்பை பற்றி சொல்லும் நூல்களுள் அனைத்தும் அக்னியில் இருந்து பிறந்தவர் என்று கூற , கல்லாடம் மட்டும் பன்னிரண்டு பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கூறுகிறது .
----------------------- கலிங்கத்துப்பரணி
Reference: http://www.tamilvu.org/library/l5920/html/l5920p12.htm
கள்ளர்கள் பூணூலும் அணிவதில்லை .. ஆனால் இந்த வழக்கம் வன்னியரில் உண்டு .'
இந்த கீழை சாளுக்கிய மரபு கூட வன்னியருக்கும் உறவாக உள்ளது .. அதாவது வன்னியர் பிறப்பை பற்றி சொல்லும் நூல்களுள் அனைத்தும் அக்னியில் இருந்து பிறந்தவர் என்று கூற , கல்லாடம் மட்டும் பன்னிரண்டு பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கூறுகிறது .
அதாவது சாளுக்கியர் கீழ் குறுநில மன்னராக இருந்துள்ளனர் என்பது இதன் அர்த்தம் .அது மட்டுமல்லாது வன்னியர்களுக்கு சாளுக்கியர் என்ற பட்டமும் உண்டு .
அடுத்து தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் (மூன்று தொகுதிகள்) - (முனைவர் பா.சுப்பிரமணியன் 1989 பதிப்பாசிரியர்) (வெளியீடு : தஞ்சாவூர் பல்கலைக் கழகம்) என்ற பகுதியில் இடங்கை வலங்கை சாதியை பற்றி குறிப்பிடும் போது ,
வலங்கைச் சாதியினராக (1) ரெட்டிவடுகர் (2) கமல வடுகர் (3) துளுவ வடுகர் (4) துளுவச் செட்டி (5) வெள்ளாளச் செட்டி (6) குத்திக் கொல்லர் (7) நங்காரி வடுகர் (8) சேணயர் (9) சலுப்பன் (10) இடையர் (11) சாலியர் (12) கோமுட்டி (13) உப்பிலியன் (14) சாணான் (15) சுண்ணாம்புக்காரன் (16) மாறாயச் செட்டி (17) மேளகாரன் (18) வலையர் (19) தெலுங்க அம் பட்டன் (20) தமிழ் அம்பட்டன் (21) வண்ணான் (22) வாணியன் என இருபத்திரண்டு சாதியினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வலங்கைச் சாதியினராக (1) ரெட்டிவடுகர் (2) கமல வடுகர் (3) துளுவ வடுகர் (4) துளுவச் செட்டி (5) வெள்ளாளச் செட்டி (6) குத்திக் கொல்லர் (7) நங்காரி வடுகர் (8) சேணயர் (9) சலுப்பன் (10) இடையர் (11) சாலியர் (12) கோமுட்டி (13) உப்பிலியன் (14) சாணான் (15) சுண்ணாம்புக்காரன் (16) மாறாயச் செட்டி (17) மேளகாரன் (18) வலையர் (19) தெலுங்க அம் பட்டன் (20) தமிழ் அம்பட்டன் (21) வண்ணான் (22) வாணியன் என இருபத்திரண்டு சாதியினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இடங்கைச் சாதியினராக (1) மேலசெட்டி (2) கைகோளர் (3) பள்ளி (4) படையாச்சி (5) மறவர் (6) மேளக்காரர் என ஆறு சாதியினர் குறிப்பிடப் பட்டுள்ளனர்.
Reference : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21440:2012-09-27-18-44-18&catid=25:tamilnadu&Itemid=137
தஞ்சை பகுதிகளில் மாரதியர் ஆட்சியின் போது இடங்கை வலங்கை சாதிகள் என்று குறிப்பிட பட்டு இருப்பதில் கள்ளர் என்ற சாதி காணப்படவில்லை . அவர்கள் தஞ்சை குடந்தை பகுதிகளில் இருந்தவர் பற்றி குறிப்பிடும் போது படையாச்சி , மறவர் என்ற சாதிகள் இருந்ததாக மட்டுமே கூறுகின்றனர் . தஞ்சை கள்ளர்கள் இங்கே பன்னெடுங்காலமாக வாழ்ந்தார்கள் என்றால் ஏன் அவர்கள் குறிப்பிட படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது .
நன்றி : இந்த களப என்னும் கல்வெட்டு குறிப்பை பற்றி செய்தி எனக்கு கிடைக்க காரணமாக இருந்த திரு.ராஜேஷ் பிள்ளை அவர்களுக்கு நன்றி
வன்னியர் புராணம்
வந்தியதேவன் யார் ? என்ன குலம்? இப்போது இவர்கள் பிரிவு இருக்கிறார்களா ? இது போன்ற கேள்விக்கு என்னால் ஆனா விடை ..
இவன் பெயரை வைத்து இவன் இவன் எங்கள் இனம் உங்கள் இனம் என்ற சில சண்டைகளை இணையதளங்களில் பார்க்க முடிந்தது . அதனாலே இதை பற்றி எழுத முற்ப்பட்டேன் ..
பொன்னியின் செல்வனின் கதாநாயகனும் , ராஜ ராஜனின் தமக்கை குந்தவை நாச்சியாரை மனம் முடித்தவனும் இவன்தான் .... வந்தியத்தேவன் என்னும் இவன் வாணர் குலத்தவன் ...
வாணர் குல அரசன் .. பல்லவர் நாடு எனப்படும் வட தமிழ்நாடு (தொண்டைமண்டலம் ) பகுதியிலிருந்து வந்தவன் .
வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். ...
வாணர் குலத்தவர்கள் "வானத்தரையர் " என்ற பட்டம் கொண்டவர்கள் ... சிதம்பரம் அருகில் உள்ள "வல்லம்படுகை " என்னும் கிராமத்திலும் அதை சுற்றிலும் வாழும் வன்னியர்கள் இந்த "வானத்தரையர் "என்னும் பட்டம் கொண்டவர்கள்.. வானத்தரையன் என்னும் சொல் வாணர் குலத்தை குறிக்கும் .. இவன் ஆண்ட பிரம்மதேசம் என்பது இன்றைய வட ஆர்க்காடு பகுதியாகும் ..
Etymologically, and also as per inscription at Tirumalai hill, near Polur, the correct name may be Vanniathevan or Vanyadevan (of the Vanniar caste) who was a Pallava prince ..
சோழர்கள் ஆட்சி வீழ்ந்தபோது தொடர்ந்து சம்புவராயர்,காடவராயர்,வாணகோவரையர் எனும் பெயர்களில் வன்னியர்கள் ஆட்சி செய்தனர்.
இந்த தகவல் "வரலாற்றில் பெண்ணாகடம்" எனும் நூலில் உள்ளது. வாணகோவரையர்கள் (வாணர் குலத்தவர்கள் ) வன்னிய அரசர் என்பது இதன்மூலம் தெரிகிறது.
இவனை பற்றிய மணிமங்கலம் கல்வெட்டுகள் என்னும் தலைப்பில் உள்ளவையும் இவனை "வன்னிய ரேவன்" என்னும் பெயரால் குறிக்கிறது .. ரேவன் என்னும் சொல்லே இப்போது தேவன் என்று குறிப்பிட படுகிறது .
இவனது தலைநகரத்தில்தான் ராஜேந்திரன் இயற்க்கை எய்தினார் என்றும் சொல்ல படுகிறது . அவரின் சமாதி பிரம்மதேசத்தில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டேன் . அதை பற்றி செய்தி தெரிந்தவர்கள் பதிவிடலாம் ..
மொத்தத்தில் ராஜேந்திரன், ஆதித்ய சோழன், கரிகாலன் சோழன் வழி வந்தரேனாட்டு சோழர்கள் , உத்தம சோழர் என்று அனைவரும் ஆண்டதும் மாண்டதும் , அவர்கள் சமாதி இருப்பதும் இன்றைய வன்னியர் பகுதியான வட தமிழ்நாடு என்று நினைக்கையில் கொஞ்சும் பெருமைதான் . ராஜ ராஜனும் சமாதியும் படையாட்சிகள் அதிகம் வசிக்கும் ‘கும்பகோணம் பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது’.. இதை பராமரிப்பவர் பக்கிரிசாமி படையாட்சி என்னும் ஏழை விவசாயி ...............
Posted by
வசந்தராஜ படையாட்சியார்
இது தான் சென்னை ஜமீன் பல்லாவரத்தில் இருக்கின்ற மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில் .
இந்த குடைவரையில் தனது விருதுபெயர்களை பொறித்துள்ளார் மகேந்திரவர்மன். தற்போது இது ஒரு இசுலாம் வழிப்பாட்டு தலமாக மாறியுள்ளது. இங்கு ஒரு முசுலீம் பெரியவர் வந்து தங்கி இங்கேயே அடக்கம் ஆகியுள்ளார். அதனால் இது ஒரு தர்காவாக மாற்றட்டப்பட்டுள்ளது. தற்போது இதை சுற்றி பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.
இங்கு உள்ள குடைவரை மொசைக் ஒட்டப்பட்டு கல்வெட்டுக்கள் எல்லாம் மறைந்து விட்டது. தொல்பொருள் துறையினரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
என்ன செய்வது ஒரு வன்னியனின் வரலாற்று நினைவு நம் கண் முன்னே நம்மை விட்டு மறைகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது இந்த புகைப்படம்.
செய்தியை அளித்த திரு பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி
அதனால் வன்னியர்-முத்தரையர் இடையே நல்லுறவு இருந்திருந்தது ......
வன்னியர்களுடன் மிக நெருங்கிய உறவுள்ளவர்கள் முத்தரையர் மற்றும் உடையார்கள் ....
வேலூர் மாவட்டங்களில் சில இடத்தில் முத்தரையர்கள் தங்களை வன்னிய நாயக்கர் என்று அழைக்கும் பழக்கமும் உண்டு ...
முத்தரையரில் உட்ப்பிரிவாக உள்ள பட்டங்களில் "வன்னியர் குல சத்திரிய முத்தரையர்" என்பதும் உண்டு ..
நண்பர் திரு. Bodhi Varma "முத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு" பற்றி முத்தரையர்களின் நூலில் இருந்து எடுத்த செய்தி இங்கே :
வன்னியர் தோற்றம்
Photo is loading
வன்னிய சொந்தங்களிடம் சமுதாய விழிப்புனர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற ஆவலுடன் இந்த குழுமத்தை உருவாக்கியுள்ளேன். வன்னியர்கள் இதில் தங்களை இணைத்துக்கொண்டு சமுதாய கருத்துகளை பரிமாறிக்கொள்ள வேண்டுகிறேன். வாழ்க வன்னியர் சமுதாயம் !! வளர்க வன்னியர் ஒற்றுமை !!! வரலாற்று நோக்கில் வன்னியர்: படையாச்சி கவுண்டர் நாயக்கர் சம்புவரையர் காடவராயர் காலிங்கராயர்போன்ற சாதியினர் வன்னியரின் உட்பிரிவுகளாக கூறப்படுகின்றனர். வன்னியர்கள் பல்லவ வம்சத்தை சேர்ந்த்தவர்கள் என்றும் பரவலாக கருதப்படுகிறது. ஆதாரம் இந்த கருத்தை உறுதியாக்கும் வகையில் பல சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின் பல பகுதிகள் வன்னியர்களாலும்,வன்னியச்சிகளாலும் ஆட்சி செய்யப்பட்டது. வன்னியர்களின் அடையாளமாகவன்னி மரம்கருதப்படுகிறது. வன்னியர் தோற்றம்:. வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னியர்கள் தென்னிந்தியாவில் பெரும்பாலும் அதிகமாக காணப்படுகின்றனர்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் இவர்கள் அக்னிவம்சி என்றும் அழைக்கப்படுகின்றனர். சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான் திருவள்ளுவர் காலத்தை சேர்ந்த கல்லாடம் என்ற நூலில் வன்னி என்ற சொல் அரசன் என்ற பதத்தை குறிக்க பயன்படுத்த் ப்ட்டிருப்பது குறிப்பிட தகுந்த ஒன்றாகும். வன்னியரில் 18 உட்பிரிவு இருக்கிறது.. அதில் வன்னிய குல சத்திரியர்தான் உயர்ந்த பிரிவினர்.. அவர்களில்தான் கவுண்டர் என்னும் பட்டம் இருக்கும்.. படையாச்சி பிரிவில், அரச படையாச்சி, பந்த படையாச்சி என்னும் பிரிவு இருக்கும்.. பந்த படையாச்சியிடம் அரச படையாச்சியினர் கொடுக்கல் வாங்கல் இருக்காது.. அரச படையாச்சியினர் பழக்க வழக்கங்களும், பந்த படையாச்சியினரின் பழக்க வழக்கங்களும் வெவ்வேறு.. இதை நான் வான்னியர் சிலரிடம் இருந்த கேட்டு தெரிந்து கொண்டது.. வன்னி என்பதற்கு காடு என்னும் அர்த்தமும் இருக்கிறது.. வன்னியர்கள் காடுகளை வெட்டி, குடியிருப்பதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுப்பதில் திறமை மிக்கவர்.. அதனால்தான் காடுவெட்டி குரு என்ற பெயர் வரக் காரணம்.. படித்தவர்கள் வரலாற்றை நடுநாயகமாக ஆராய வேண்டும்.. வன்னியர் உட்பிரிவில் ஒவ்வொரு பிரிவும் ஒரு பாரம்பரியம் கொண்டிருக்கும்.. அதை பாதுகாப்பதும் இன்று அவசிய தேவை.. ஏனென்றால், அது தான் பண்பாட்டின் அடையாளம்.. அந்த பாரம்பரியம் போய் விட்டால், அப்புறம் எல்லாரும் வெட்டு குத்துதான் பண்ண வேண்டியிருக்கும்.. தன்னம்பிக்கையே உன் உடன்பிறப்பு தங்கமே உனக்கு என்னடா தலைகுனிவு சாதிக்க பிறந்தவன் நீ சஞ்சலங்கள் படாதே.. விடியலை நோக்கிய பயணத்திலும் விஞ்ஞான உலகத்திலும் உன் காலடி சுவடுகள் தொடரும்...
Subscribe to:
Posts (Atom)