Friday, June 14, 2013


மதுரையை "சுந்தர பாண்டியன்" ஆட்சி செய்த காலத்தில் , மதுரை தமிழ் சங்கப் புலவராக இருந்த "வீர பிள்ளை " என்பவரால் சுந்தர பாண்டியன் தலைமையில் இயற்றப்பட்டதே "வன்னியர் புராணம் " !மதுரையை "சுந்தர பாண்டியன்" ஆட்சி செய்த காலத்தில் , மதுரை தமிழ் சங்கப் புலவராக இருந்த "வீர பிள்ளை " என்பவரால் சுந்தர பாண்டியன் தலைமையில் இயற்றப்பட்டதே "வன்னியர் புராணம் " ! சோழர்களின் வேளைக்கார படையும் , அந்த படை தலைவர்களும் வன்னியர்கள் . வேளைக்கார படை என்பதே மன்னருக்கு மிக நெருக்கமாக உள்ள படை . மன்னரின் படைத்தளங்களிலேயே அதிக உரிமை உள்ளவர்கள் இவர்கள்தான் . எந்த படையாய் இருந்தாலும் , வேளைக்கார படை வரும்போது ஒதுங்கிருக்க வேண்டும் .((இதை பற்றி பொன்னியின் செல்வன் நாவலில் கூட கல்கி அவர்கள் எழுதிருப்பார் . சுந்தர சோழனின் மெய்க்காப்பாளரும் தளபதியுமான பழுவேட்டரையரும் கூட வேளைக்கார படையும் அதன் தலைவனும் வந்தால் ஒதுங்கி செல்ல வேண்டும் )). இவர்கள் யார் என்றால் , போர் நடக்கும் பொது மன்னரின் உயிரை பாதுக்காக்கும் பொறுப்பு இவர்களுடையது . மன்னரை சுற்றி இந்த படை வீரர்களே இருப்பார்கள் . இவர்கள் நிரந்தரமான நம்பிக்கைக்குப் பாத்திரமான சேவகர்களாகப் பணிபுரிந்தனர். பெயருக்கேற்ப வேளை வரும்போது இவர்கள் தம் உயிரையும் கொடுத்து அரசனைக் காக்கும் பொறுப்பு இவர்களுடையது . இப்படையின் தலைவனான வன்னியருக்கு "வன்னிய நாயன் (அ) வன்னிய நாயகர் " என்ற பட்டம் இருக்கும் . இவர்கள் படைத்தலைவன் வழி வந்தோரே பண்டார வன்னியனும் அவன் முன்னோர்களும் . பத்தாம் நூற்றாண்டு பிற்பகுதியில் சோழர் படையுடன் ஈழத்திற்கு சென்ற வன்னியர்களான இப்படையின் உதவியாலே ஈழத்தில் வன்னியர்கள் நிலை பெறவும் அதிகளவில் குடியேறவும் வழி பிறந்திருக்கிறது .

No comments:

Post a Comment