Friday, June 14, 2013
வன்னியர் தோற்றம்
Photo is loading
வன்னிய சொந்தங்களிடம் சமுதாய விழிப்புனர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற ஆவலுடன் இந்த குழுமத்தை உருவாக்கியுள்ளேன். வன்னியர்கள் இதில் தங்களை இணைத்துக்கொண்டு சமுதாய கருத்துகளை பரிமாறிக்கொள்ள வேண்டுகிறேன். வாழ்க வன்னியர் சமுதாயம் !! வளர்க வன்னியர் ஒற்றுமை !!! வரலாற்று நோக்கில் வன்னியர்: படையாச்சி கவுண்டர் நாயக்கர் சம்புவரையர் காடவராயர் காலிங்கராயர்போன்ற சாதியினர் வன்னியரின் உட்பிரிவுகளாக கூறப்படுகின்றனர். வன்னியர்கள் பல்லவ வம்சத்தை சேர்ந்த்தவர்கள் என்றும் பரவலாக கருதப்படுகிறது. ஆதாரம் இந்த கருத்தை உறுதியாக்கும் வகையில் பல சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின் பல பகுதிகள் வன்னியர்களாலும்,வன்னியச்சிகளாலும் ஆட்சி செய்யப்பட்டது. வன்னியர்களின் அடையாளமாகவன்னி மரம்கருதப்படுகிறது. வன்னியர் தோற்றம்:. வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னியர்கள் தென்னிந்தியாவில் பெரும்பாலும் அதிகமாக காணப்படுகின்றனர்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் இவர்கள் அக்னிவம்சி என்றும் அழைக்கப்படுகின்றனர். சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான் திருவள்ளுவர் காலத்தை சேர்ந்த கல்லாடம் என்ற நூலில் வன்னி என்ற சொல் அரசன் என்ற பதத்தை குறிக்க பயன்படுத்த் ப்ட்டிருப்பது குறிப்பிட தகுந்த ஒன்றாகும். வன்னியரில் 18 உட்பிரிவு இருக்கிறது.. அதில் வன்னிய குல சத்திரியர்தான் உயர்ந்த பிரிவினர்.. அவர்களில்தான் கவுண்டர் என்னும் பட்டம் இருக்கும்.. படையாச்சி பிரிவில், அரச படையாச்சி, பந்த படையாச்சி என்னும் பிரிவு இருக்கும்.. பந்த படையாச்சியிடம் அரச படையாச்சியினர் கொடுக்கல் வாங்கல் இருக்காது.. அரச படையாச்சியினர் பழக்க வழக்கங்களும், பந்த படையாச்சியினரின் பழக்க வழக்கங்களும் வெவ்வேறு.. இதை நான் வான்னியர் சிலரிடம் இருந்த கேட்டு தெரிந்து கொண்டது.. வன்னி என்பதற்கு காடு என்னும் அர்த்தமும் இருக்கிறது.. வன்னியர்கள் காடுகளை வெட்டி, குடியிருப்பதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுப்பதில் திறமை மிக்கவர்.. அதனால்தான் காடுவெட்டி குரு என்ற பெயர் வரக் காரணம்.. படித்தவர்கள் வரலாற்றை நடுநாயகமாக ஆராய வேண்டும்.. வன்னியர் உட்பிரிவில் ஒவ்வொரு பிரிவும் ஒரு பாரம்பரியம் கொண்டிருக்கும்.. அதை பாதுகாப்பதும் இன்று அவசிய தேவை.. ஏனென்றால், அது தான் பண்பாட்டின் அடையாளம்.. அந்த பாரம்பரியம் போய் விட்டால், அப்புறம் எல்லாரும் வெட்டு குத்துதான் பண்ண வேண்டியிருக்கும்.. தன்னம்பிக்கையே உன் உடன்பிறப்பு தங்கமே உனக்கு என்னடா தலைகுனிவு சாதிக்க பிறந்தவன் நீ சஞ்சலங்கள் படாதே.. விடியலை நோக்கிய பயணத்திலும் விஞ்ஞான உலகத்திலும் உன் காலடி சுவடுகள் தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
இது போன்ற வரலாற்று தகவல்கலை மேலும் விரும்புகிரேன்
ReplyDeleteஇது போன்ற வரலாற்று தகவல்கலை மேலும் விரும்புகிரேன்
ReplyDeleteசிறப்பான பதிவு நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteசிறப்பான பதிவு நன்றி
ReplyDeleteஇது போன்்ற குறிப்்புகள்் நிறைய வேண்்டும்்.
ReplyDeleteNaickar pathi sollavillai ????
ReplyDeleteநன்றி
ReplyDeleteபாளையபட்டு படையாட்சியை சொல்லாமல் விட்டிர்கள் நான் படையாட்சியில் பாளையபட்டு மஹாராயர் பட்டம்
ReplyDeleteவாழ்க வளமுடன் இராசிபுரம் வன்னியர்
ReplyDeleteராஜா சோழன் பேரன் யுவராஜூ படையாட்சி வாழ்க படையாட்சி குடும்பம் .வெங்கரை பசங்க வன்னியர் சங்கம் வெங்கர மாவீரன் காடுவெட்டியார் தம்பிகள்
ReplyDeleteNice
ReplyDelete